பாஸ்டர் கனகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பாஸ்டர் ஜான் தாமஸ் ?

பாஸ்டர் கனகராஜ் கடந்த 5.10.2016 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை உறுதி செய்து வெளியிட்டது பாஸ்டர் ஜான் தாமஸ். இந்த ஜான் தாமஸ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி பாஸ்டராக நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் த பெந்தேகோஸ்தே சபையில் பாஸ்டர் கனகராஜிக்கு அடுத்த பதவியில் இருந்தவர் பாஸ்டர் ஜான் தாமஸ். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றம் செய்வதற்கு முன்பாக ஜான் தாமஸ் நாகர்கோவில், பெங்களூர், சென்னை மற்றும் பல முக்கிய நகரங்களில் துறவறப்பணி ஆற்றியுள்ளார்.
அவர் பணியாற்றிய சபைகளில் எல்லாம் இவர் பிரச்சினையுடன் தான் மாற்றமாகி வந்துள்ளதாக அப்பகுதியின் சபை விசுவாசிகளால் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பெங்களூரில் பணியாற்றிய போது பெங்களூரைச் சார்ந்த விசுவாசிகள் இவரை குறித்து எனக்கு அலைபேசியில் பல விதமாக கூறி வருகின்றார்கள். இவ்வாறு பல விமர்சனத்துக்கு ஆளான இவர் தூத்துக்குடிக்கு மாறுதலாகி வந்த பின்பு பாஸ்டர் கனகராஜ் உடன் நெருங்கிய அன்புடனும் பாசத்துடனும் ஊழியத்தில் இருந்ததாக இவரைப் பற்றி நல்ல சாட்சி கூறவில்லை.
பாஸ்டர் கனகராஜின் மரணத்திற்கு மறுநாள் 6.10.16 அன்று நடந்த அடக்க ஆராதனையில் இவரது சாட்சியை கேட்ட அனைவரும் இவருக்கு எதிராக முனுமுனுத்துள்ளார்கள்.அவரது சாட்சியத்தில் பாஸ்டர் கனகராஜ் தனக்கு ஆறு மாதங்களாக சபை நடத்துவதற்கான ஊழியம் கொடுக்க வில்லை என்று ஆதங்கப்பட்டு பேசியதை பலர் தங்களது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்கள். பாஸ்டர் கனகராஜ் மரணமடைந்ததும் மாவட்டத்தின் பொறுப்பு பாஸ்டராக இவர் இருந்ததினால் சபை விசுவாசிகள் அனைவருக்கும் பாஸ்டர் மரணமடைந்ததாக இவரது அலைபேசி மூலமாக தகவலை இவர் வெளியிட்டார். அன்றைய தினம் உடனடியாக சபைக்கு வந்து பாஸ்டர் உடலை பார்த்த விசுவாசிகளிடம் உடலில் இருந்த காயத்திற்கு கழிப்பறையில் விழுந்து விட்டதாகவும், நெஞ்சுவலியால் அவராகவே கழுத்தை நெறித்து கொண்டதாகவும் பாஸ்டருக்கு சவரம் செய்யும் போது கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், பல செய்திகளை வெளியிட்ட இவர் அவசர அவசரமாக ஆலயத்திற்கு அருகிலிருந்த மருத்துவர் போஸ்வெல் செல்வ நாயகத்திடம் இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளார்.
இதற்கு முன்பு இவ் ஆலயத்தில் இறந்த பாஸ்டர்கள் ஜார்ஜ், பெஞ்சமின், மைக்கேல், தேவராஜ் மற்றும் பல சகோதர சகோதரிகள் மரணமடைந்த போது சபையிலிருந்து மருத்துவரிடம் இறப்பு சான்றிதழ் பெற வில்லை. அவ்வாறு மருத்துவ சான்று வாங்குவது சபையின் மரபுமில்லை.அவ்வாறு இருக்கும்பட்சத்தில் பாஸ்டர் கனகராஜ் இறப்பிற்கு இறப்பு சான்று வாங்கியதின் மர்மம் என்ன?
பாஸ்டர் கனகராஜின் உடலில் உள்ள காயத்தினை பஞ்சை வைத்து மறைத்ததின் மர்மம் என்ன? பாஸ்டர் கனகராஜிக்கு “ஹார்ட் அட்டக்” என்று சபையில் கூறியதன் காரணம் என்ன ? சபையில் பாஸ்டர் கனகராஜிற்கு ஏற்பட்ட காயத்தை சபையில் விளக்காததின் காரணம் என்ன? உதட்டில் பெவிக்காலை வைத்து ஒட்டியதன் காரணம் என்ன?
என சபை விசுவாசிகள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது பாஸ்டர் கனகராஜ் அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது. இப்பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பாஸ்டர் கனகராஜை ஜான் தாமஸ் கொலை செய்தாரா ?அல்லது அவரது தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி விசுவாசிகள் மத்தியில் எழும்பியுள்ளது.மருத்துவ அறிக்கையின்படி பாஸ்டர் கனகராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் இக்கொலையை மறைப்பதற்கு மருத்துவ சான்றிதழ் வாங்கி தடயங்களை அழிக்க முயற்சி செய்த பாஸ்டர் ஜான் தாமஸ் ஒரு கொலை குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட கூடியவர். இவர் மட்டும் இந்த கொலையை மறைக்க முயற்சிக்கவில்லை.இவருக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களும் இவருக்கு உடந்தையாக இக்கொலையை மறைத்துள்ளதால் சட்டத்தின் முன் கொலை குற்றவாளிகளே !
இக்கொலையை மறைத்து மருத்துவ சான்று வழங்கிய மருத்துவரும் கொலை குற்றவாளியே! இக்கொலை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் காவல் துறையினரும் கொலை குற்றவாளிகளே!
“வேதாகமத்தின் தேவன் நமக்கு கட்டளையிட்ட முதல் பிரமாணம் “கொலை செய்யாதிருப்பாயாக”அப்பிரமாணத்தை மீறினவர்கள் தேவனால் தண்டிக்கப்பட கூடியவர்கள்.
நாம் ஒவ்வொருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதினால் இந்திய தண்டனை சட்டத்தின் படி மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் படி நானும் சபையாரும் பிரார்திக்கின்றோம்.
இ.அதிசய குமார்
வழக்கறிஞர்
தூத்துக்குடி
9443128937